2014/02/19, GPM
புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய
பிரதேசங்களில் இதுவரை மின்வசதி இல்லாமலிருந்தவர்களுக்கு மின்சாரம்
வழங்குவதற்காக 4500 மில்லியன் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர்
மின்வழு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி
தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தலைமையில் நேற்று (18) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் இவ்வருடம் ஜூன்
மாதமளவில் 100 வீதம் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
மின்வழு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வருட தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் கேந்திரநிலையமாக அமைந்துள்ள வடமேல் மாகாணத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு அபிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக அனைவருக்கும் மின்சாரம் வழங்குவது அவசியம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ-
அமைச்சர்களான சாலிந்த திஸாநாயக்க- ஜயரத்ன ஹேரத்- ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ-
அநுர பிரியதர்சன யாப்பா- டீ.பி. ஏக்கநாயக்க- பிரதி அமைச்ர் நியோமல்
பெரேரா- பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க உட்பட பல
அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.




Time in Colombo
0 comments:
Post a Comment