இயக்குனர் கனவுடன் சென்னை வரும் இளைஞர்களின் கனவுகளை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘உ’.
கணேஷ்(தம்பி ராமையா) படம் இயக்குவதற்கு வாய்ப்பு தேடும் ஒரு வயது முதிர்ந்த உதவி இயக்குனர். இவருக்கு மூன்று நண்பர்கள். இவர்களும் உதவி இயக்குநர்கள்தான். சில ஆண்டுகளாகவே கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி கதை சொல்லும் கணேஷ்க்கு திடீரென ஒரு கம்பெனி படம் இயக்கும் வாப்ப்பைத் தருகிறது. நேராக அறைக்கு வந்த கணேஷ் தன் நண்பர்கள் மூன்றுபேரையும் தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றும்படி கேட்கிறார்.
ஆனால் அவர்களோ தன்னை விட நீ ஒன்றும் புத்திசாலி இல்லை எனவே உன்னுடன் சேர்ந்து வேலை பார்க்க முடியாது என்று சொல்லி, உன்னால் தனியாக படம் இயக்க முடியாது என்று சவாலும் விடுகிறார்கள். ஒரு நாள் காவல்நிலையத்தில் சினிமா லட்சியம் கொண்ட நான்கு நண்பர்களை கணேஷ் சந்திக்கிறார். அவர்களிடம் சினிமா ஆர்வம் ரொம்பவே இருக்க, அவர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு படத்தை எடுக்க ஆரம்பிக்கிறார். அதே நேரத்தில் கணேஷின் பழைய நண்பர்களோ, அந்த பட நிறுவனத்தின் மேனேஜரை கைக்குள் போட்டுக் கொண்டு கணேஷ்க்கு முட்டுக் கட்டை போட முயற்சிக்கின்றனர்.
இந்த சோதனைகளை மீறி கணேஷ் படம் எடுத்து வெற்றி பெற்றாரா? நண்பர்களுடனான சபதத்தில் வெற்றி பெற்றாரா என்பது படத்தின் மீதி கதை.
படத்தின் முதுகெலும்பே தம்பி ராமையா தான். அவர் வரும் அத்தனை சீன்களுமே கலகல. அதிலும் இதில் நான்கு இளைஞர்குடன் இவர் அடிக்கும் லூட்டி அரங்கை அதிர வைக்கிறது. அது தவிர ஒரு பாடலில் நடனமும் ஆடுகிறார்.
தம்பி ராமையாவின் உதவியாளர்களாக வரும் நான்கு இளைஞர்களில் முக்கியமாக கவனிக்கப்படுபவர் சத்யா. காதல் கதைகளுக்கு பொருந்தும் முக அமைப்பு. கவுண்டர் ப்ராக்டிஸ் என்று சொல்லி தம்பி ராமையாவை கலாய்க்கும் சீன்களில் அப்ளாஸ். ஸ்மைல் செல்வா, மதன கோபால், ராஜ்கமல், தீப்ஸ், வருண், நேகா ஆகியோரும் ஓகே.
ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவில் வயல்வெளி, கிராமம், படப்பிடிப்பு காட்சிகள், தம்பி ராமையா பாடல் என நிறையவே ரசிக்க வைக்கின்றன. படத்தை 2 மணி நேரத்துக்குள் அடக்கியிருக்கும் கமலின் எடிட்டிங்-க்கு சபாஷ்.
அபிஜித் ராமசாமி இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர். முருகன் மந்திரம் வரிகள் ரொம்ப ஃபிரெஷ். திக்கி தெணருது தேவதை, ஆஹா சினிமா, ஒரு படி மேல போன்ற பாடல்களில் தங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
வசனங்களில் ‘ரெட் ஒன் கேமரான்னு சொல்றாங்களே அது சிவப்பா இருக்குமா இல்லை கருப்பா இருக்குமா? போன்ற கிண்டல் வசனங்கள் ஏராளம். படத்தில் காமெடி தான் பிரதானம் என்பதற்காக, கொஞ்சம் கூட லாஜிக் பார்க்காமல் ஒரு “ஸ்பூஃப்” படத்தை போல் எடுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
நடிகர் : வருண், தம்பி ராமையா
நடிகை : நேகா
இயக்குனர் : ஆசிக்
இசை : அபிஜித் ராமசாமி
ஓளிப்பதிவு : ஜெயப்பிரகாஷ்
நடிகை : நேகா
இயக்குனர் : ஆசிக்
இசை : அபிஜித் ராமசாமி
ஓளிப்பதிவு : ஜெயப்பிரகாஷ்





Time in Colombo
0 comments:
Post a Comment