புதன், 8 ஜனவரி 2014
இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களின் 84 படகுகளை விடுவிக்கக்கோரியும் வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார்.முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை சேர்ந்த ஏராளமான இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி சிறைப்பிடித்து செல்வது குறித்து எனது ஆழ்ந்த வேதனையையும், விரக்தியையும் வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இலங்கை கடற்படையினரின் இத்தகைய அடக்குமுறை செயல்களால், சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொல்லொணாத் துன்பமும், வாழ்க்கை பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள், அவர்களது 9 மீன்பிடி படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது குறித்து கடந்த மாதம் 30 ஆம் தேதி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியிருந்தேன்.
பாக் வளைகுடாவில் பாரம்பரியமுள்ள தங்களின் கடற்பகுதியில் வாழ்வாதாரத்திற்காக "வல்லம்" என்ற பாரம்பரிய மீன்பிடி படகுகள் மூலம் மீன்பிடிக்கும் ஏழை மீனவர்களையும் அண்மைக்காலமாக அராஜக இலங்கை கடற்படையினர் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில், கடந்த 2-ந்தேதி ஐஎன்டி-டிஎன்-09-எம்எம்-178, ஐஎன்டி- டிஎன்-11- எம்எம்-195, ஐஎன்டி- டிஎன்-- 11-எம்எம்-199, ஐஎன்டி-டிஎன்-11-எம்எம்-257 மற்றும் ஐஎன்டி- டிஎன்-09-எம்எம்-127 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட 5 எந்திர மீன்பிடி படகுகளில் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள், மண்டபம் தெற்கு மீன்பிடி தளத்திலிருந்து புறப்பட்டுச்சென்று மன்னார்வளைகுடாவில் தங்களுக்கு பாரம்பரியமுள்ள கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
ஏற்கனவே, இலங்கை சிறைகளில் பல மாதங்களாக நமது மீனவர்கள் 250 பேர், அந்நாட்டு அரசால் விடுவிக்கப்படாமல் வாடி வருவதையும், அவர்களுக்கு சொந்தமான 79 மீன்பிடி படகுகள், இலங்கையின் வசம் தொடர்ந்து வைக்கப்பட்டு சேதமடைவதோடு, அவை வருங்காலத்தில் முற்றிலும் மீன்பிடிக்க பயன்படாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும், தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பாக் வளைகுடாவில் அமைதியாக மீன்பிடிக்கும் நமது நிராயுதபாணியான அப்பாவி மீனவர்களை விரட்டியடிப்பது மற்றும் கைதுசெய்வதன் மூலம், இந்த வளைகுடா பகுதியில் தங்களுக்குள்ள ஆதிக்க போக்கை இலங்கை கடற்படையினர் நிலைநாட்டுகின்றனர். இதுதொடர்பாக, இந்திய அரசு மிகவும் பலவீனமான முறையில் பதில் நடவடிக்கை மேற்கொள்வதால் நமது அப்பாவி மீனவர்கள் மீது கொடூரத்தாக்குதல்களை நடத்த இலங்கை கடற்படையினருக்கு துணிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய அரசு மீது மீனவ சமுதாயத்தினர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களும் கோபமும், ஆத்திரமும் கொண்டுள்ளனர்.
இப்பிரச்சனையில், தாங்கள் நேரடியாக தலையிட்டு, இந்திய அரசின் தூதரக வழிமுறைகள் மூலம் திட்டவட்டமாக - உறுதியான வகையில் செயல்பட்டு, ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள 250 மீனவர்களையும், கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும், அவர்களுடைய 84 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தங்களை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Time in Colombo
0 comments:
Post a Comment