புதன், 8 ஜனவரி 2014
அமெரிக்க கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேருக்கும், தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை ரத்து செய்தார்.
முன்னதாக, இவ்வழக்கில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகையை க்யூ பிரிவு போலீஸார் தாக்கல் செய்யாததால், 35 பேருக்கும் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இதை எதிர்த்து க்யூ பிரிவு போலீஸார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். க்யூ பிரிவு போலீஸார் தரப்பில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை உள்ள வழக்கில் மட்டுமே 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், அமெரிக்க கப்பல் ஊழியர்கள் மீதான வழக்கு சிறப்பு வழக்கு என்பதால் 90 நாள்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம். எனவே, 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்தார். அதன்படி, செவ்வாய்க்கிழமை, 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 35 பேரில் 12 பேர் இந்தியர்கள். அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், வெளிநாட்டைச் சேர்ந்த 23 பேர் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

Time in Colombo
0 comments:
Post a Comment