யாழ். சாவகச்சேரியில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை பிரதம நீதியரசர்
மொஹான் பீரிஸ் இன்று09உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி
நந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நீதி அமைச்சர் ரவூப்
ஹக்கீம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுனர் ஆகியோர் கலந்து
கொண்டனர்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த
நீதிமன்ற கட்டிடத்தொகுதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 159 மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 175 மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்ட மல்லாகம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியும், 127 மில்லியன்
ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஊர்காவற்றுறை நீதிமன்றத் தொகுதியும் இன்று
திறந்து வைக்கப்பட்டன.




Time in Colombo
0 comments:
Post a Comment